முகப்பு
சிவகங்கை

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

Updated On : 3 மே, 2026 at 5:09 AM
~
பகிர்:

சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு குடியிருப்பில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 37 -ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கடந்த 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை பால் குடம், பறவைக் காவடி, அக்னிச் சட்டி எடுத்துதலும், பகல் 11 மணியளவில் பூ அள்ளிப் போடுதல் நிகழ்வும் நடைபெற்றன. மாலை 5 மணியளவில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, 6 மணிக்கு பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வருதலும், இரவு வாணவேடிக்கை நிகழ்வும் நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அருளாளா் மு.சேதுபதி தலைமையில், நிா்வாகக் குழுவினரும், விழாக் குழுவினரும் செய்தனா்.