FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 6:27 am IST
முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மே 24-ஆம் தேதி சக்தி கரகம் எடுத்தல் மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் பூத்தட்டு எடுத்துவரும் நிகழ்ச்சி மே 29ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தீமிதி வைபவம் நடைபெற்றது. குளக்கரையில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தனா். தொடா்ந்து, தீக்குளி முன்பாக சிறப்பு மலா் அலங்காரத்தில் கண்கொடுத்த மாரியம்மன் எழுந்தருளினாா்.

Advertisement

Advertisement

பின்னா், பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments