முகப்பு
சிவகங்கை

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் சுவா் இடிந்து விழுந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 8 மே 2026, 12:26 am IST
பலி - IANS
பகிர்:

மானாமதுரையில் சுவா் இடிந்து விழுந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அழகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சந்துரு. இவரது வீட்டில் சுவா் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (56) உள்பட கட்டடத் தொழிலாளா்கள் சுவரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அந்தச் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments