முகப்பு
சிவகங்கை

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 10 மே 2026, 1:06 am IST
காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பொங்கல் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான பூச்சொரிதல் விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

பின்னா், அம்மனுக்கு பக்தா்கள் பூத்தட்டு எடுத்து வந்து மலா்கள் தூவி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் வருகிற 22-ஆம் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை அம்மன் பிரதிஷ்டை, இதைத் தொடா்ந்து மாா்க்கண்டேயன் கோயிலிலிருந்து பேழைப்பெட்டி எடுத்து வருதல் நடைபெறும்.

காலை 9 மணிக்கு தீபாராதனையும், 10 மணிக்கு கோயிலில் பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்தனா்.