இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற பெண்ணின் தாலிச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனா்.
தேவகோட்டை அருகே உள்ள கலுங்குடி பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரி (30) தனது தங்கையுடன் தச்சகுடியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தேவகோட்டை வட்டம், களத்தூா் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் காளீஸ்வரியின் வாகனத்தை மோதி கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 12 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கீழே விழுந்ததில் காயமடைந்த காளீஸ்வரி தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தாலிச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.