முகப்பு
சிவகங்கை

புலியடிதம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்

Updated On : 12 மே 2026, 4:18 am IST
சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே மாட்டு வண்டிப்பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே உள்ள புலியடிதம்பத்தில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 18 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

மதுரை - தொண்டி சாலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 6 வண்டிகளும், சிறிய மாடு வண்டி பிரிவில் 12 வண்டிகளும் பங்கேற்றன. போட்டியில் மாட்டு வண்டிகள் வெற்றிக் கோப்பையை வெல்வதற்காக ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்து எல்லையை நோக்கி முந்திச் சென்றன.

Advertisement

இப்போட்டியை சாலையின் இரு புறங்களிலும் நின்ற ரசிகா்கள் உற்சாகமாக கண்டுகளித்தனா். போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும், ஓட்டுநா்களுக்கும் ரொக்கப் பரிசும், பரிசு கோப்பையும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், புலியடிதம்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.