முகப்பு
தேனி

கொட்டகுடி மலைப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

போடி அருகே உள்ள கொட்டகுடி மலை கிராமத்திற்கான குறுக்குப் பாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:23 am IST
பகிர்:

போடி அருகே உள்ள கொட்டகுடி மலை கிராமத்திற்கான குறுக்குப் பாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
     போடி அருகே உள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நெல் மற்றும் காபி, மிளகு, இலவு, மா உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. இங்கிருந்து போடிக்கு ஜீப்பில் சென்று வர சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச் சாலை வழியாக குரங்கணி சாலையை அடைய 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இதை தவிர்த்து கொட்டகுடி ஆற்றை கடந்து கொம்புதூக்கி அய்யனார் கோயிலுக்கு குறுக்குப் பாதை வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் குரங்கணி சாலையை அடையலாம்.     இச் சாலை தற்போது மழை பெய்ததால் செடிகள் முளைத்து நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் விளை பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஜீப் செல்லும் சாலையும் சேதமடைந்துள்ளதால் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வர முடிவதில்லை. இதனால் 3 கி.மீ. தூரம் விளை பொருள்களை சுமந்து செல்ல வேண்டியுள்ளது.
    எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குறுக்கு பாதையையும், ஜீப் செல்லும் சாலையையும் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments