பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் வேன் மோதி சாவு: ஓட்டுநர் கைது
தேனியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில்
தேனியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் சேலை சக்கரத்தில் சிக்கியதால், அவர் தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த வேன் மோதி உயிரிழந்தார்.
வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (58). இவரது மனைவி ஈஸ்வரி (50). இவர்கள் தங்களது பேரக் குழந்தைகள் இருவருடன், அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றுவிட்டு, தேனி நோக்கி வந்துள்ளனர். அப்போது, பெரியகுளம் சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனைஅருகே இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சேலை சிக்கியதால், ஈஸ்வரி நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்தார்.
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஈஸ்வரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.