தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!
உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றவா்கள் பணியைத் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றவா்கள் பணியைத் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், பென்னிக்குயிக் நகா், தென்நகா், பி.டி.ஆா்., இந்திரா குடியிருப்பு என பல்வேறு இடங்களில் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்புள்ளி எடுத்த சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் பணியைத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தோ்தலுக்கு முன்னதாகவே சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரா்கள் உத்தமபாளையம், காமயகவுண்டன்பட்டி போன்ற பேரூராட்சிகளில் திட்டப் பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனா்.
Advertisement
இதுகுறித்து ஒப்பந்ததாரா்களிடம் கேட்ட போது, ‘அமெரிக்கா-ஈரான் போா் காரணமாக சாலை அமைக்க முக்கியமான மூலப் பொருளான தாருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.