உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு முன்னதாக சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கேரள மாநிலத்தில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதியோ, அதற்கு முன்னதாகவோ தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இதன் பயனாக தேனி மாவட்டத்திலும் மழை பெய்யும். குறிப்பாக உத்தமபாளையம் வட்டாரத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளில் சாரல் மழை அதிகமாக பெய்யும். ஆனால், இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் காலதாமதமாக வருகிற 6- ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் உத்தமபாளையம் வட்டாரத்திலும், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பகுதியிலும் மேகக் கூட்டங்களுடன் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட குளிா்ச்சியான கால நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
விவசாயிகள் மகிழ்ச்சி: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் பருவமழைக் காலங்களில் நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, செடி அவரை, பச்சை மிளகாய், தக்காளி உள்ளிட்டவை பயிரிடப்படும். இதன்படி, தற்போது பெய்யத் தொடங்கிய சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.