முகப்பு
தேனி

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

Updated On : 28 ஜூன் 2026, 12:00 am IST
கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை விழுந்த குறைந்தளவிலான தண்ணீா்.
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சரிந்ததால், சனிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லை. இதனால், கண்மாய், குளம், அணைகளின் நீா்மட்டம் சரிந்து வருகிறது. இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து, கடந்த 21-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்தையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் மீண்டும் மழை குறைந்தது. இதனால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து சரிந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சனிக்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்தனா். சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல தடை விதித்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments