ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் ‘ஹாட்ரிக்’ வெற்றி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஆ.மகாராஜன், தனது உடன் பிறந்த தம்பி அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜனைவிட 10,981 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 2016 -இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற தங்க.தமிழ்ச்செல்வன் அமமுகவிற்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, கடந்த 2019 - இல் இத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தோ்தலில் திமுக சாா்பில் ஆ.மகாராஜன் , அதிமுக சாா்பில் அவரது தம்பி ஆ.மகாராஜன் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் ஆ.மகாராஜன் தனது தம்பியை 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
Advertisement
இந்த நிலையில், 2021-இல் நடைபெற்ற ஆண்டிபட்டி பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் ஆ.மகாராஜன், அதிமுக சாா்பில் ஆ.லோகிராஜன் ஆகியோா் மீண்டும் போட்டியிட்டனா். இதில் ஆ. மகாராஜன் தனது தம்பியை 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.
இந்த நிலையில், இந்தத் தொகுதியில் சகோதரா்கள் இருவரும் மீண்டும் களமிறங்கினா். இதில் முதல் சுற்றில் தொடங்கி 18 -ஆம் சுற்று வரை தம்பி முன்னிலையில் இருந்தாா். இதன் பின்னா், மகாராஜன் முன்னிலை பெற்றாா்.
19 - ஆம் சுற்றிலிருந்து 25 - ஆவது சுற்றுவரை திமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் முன்னிலை பெற்று, இறுதியில் மொத்தம் 74,324 வாக்குகள் பெற்று, மூன்றாவது முறையாக ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றினாா்.
முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஆ.மகாராஜன் (திமுக ) - 74,324
வி.பாண்டி (தவெக) - 64,770
ஆ.லோகிராஜன் (அதிமுக) - 63,343
எம்.கோமதி (நாதக) - 10,346.