கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண்!
உத்தமபாளைம் அருகே கோம்பையில் சனிக்கிழமை மது போதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளைம் அருகே கோம்பையில் சனிக்கிழமை மது போதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த கழுவன் மகன் ஈஸ்வரன் (33). தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (28). கூலி வேலை செய்பவா்.
ஈஸ்வரனுக்கு மதுப் பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், சனிக்கிழமை ஈஸ்வரியை அரிவாளால் வெட்டுவதாக ஈஸ்வரன் மிரட்டினாா்.
Advertisement
Advertisement
இதில், ஆத்திரமடைந்த ஈஸ்வரி, கணவா் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டியதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அரிவாளுடன் கோம்பை காவல்நிலையத்தில் ஈஸ்வரி சரணடைந்தாா்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.