முகப்பு
விருதுநகர்

கல்குறிச்சி அருகே பாலிதீன் பையில் ஆண் சடலம்: போலீஸார் விசாரணை

கல்குறிச்சி அருகே நான்கு வழிச் சாலையில் பாலத்தின் அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு, பாலிதீன் பையில் சுற்றி

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:28 am IST
பகிர்:

கல்குறிச்சி அருகே நான்கு வழிச் சாலையில் பாலத்தின் அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு, பாலிதீன் பையில் சுற்றி வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு காவல் சரகத்துக்கு உள்பட்ட கல்குறிச்சியில்  நான்கு வழிச்சாலை பாலம் உள்ளது. இப்பாலத்தின் அடியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. 
 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாங்கிணறு போலீஸார், பாலிதீன் பையில் சுருட்டப்பட்டு கிடந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து, சடலமாக மீட்கப்பட்டவர் யார்? அவரை யாரேனும் கொலை செய்து வீசிச் சென்றனரா? 
என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments