முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சாலை தடுப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பூவாணி அருகே போலீஸார் ஏற்படுத்தியுள்ள சாலை தடுப்பால்

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:30 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பூவாணி அருகே போலீஸார் ஏற்படுத்தியுள்ள சாலை தடுப்பால் தினமும் விபத்து ஏற்படுகிறது. இதனால், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் கிருஷ்ணன்கோவிலுக்கும் இடையே பூவாணி விலக்கு அருகே காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் மைதனம் உள்ளது. 
 தற்போது இந்த மைதானத்தில் வத்திராயிருப்பு தனி காவல்படை முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வளைவும் இல்லாத இந்த இடத்தில், போலீஸார் பேருந்துகளில் வந்து செல்வதற்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. 
 நகரப் பேருந்துகளில் காவலர்கள் வந்தால் இந்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்களை இறக்கி, ஏற்றிச் செல்வார்கள். தற்போது அனைத்து வகையான பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்பதற்காக இந்த தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதாக, இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். 
இச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் பல்வேறு இடங்களில் சாலை தடுப்புகளை வைக்க முன்வராத போலீஸார், தங்களது வசதிக்காக இந்த தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் இரு 
சக்கர வாகனத்தில் வருவோர் இந்த தடுப்புகளில் மோதி காயமடைகின்றனர். மாவட்ட 
காவல் துறை, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள இந்த சாலை தடுப்புகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments