முகப்பு
விருதுநகர்

கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம்

சிவகாசியில் திங்கள்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:38 am IST
பகிர்:

சிவகாசியில் திங்கள்கிழமை கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இ.அடங்கல் முறையில் சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலர்களே வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவகங்களில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். மாவட்ட அளவிலான பணியிட மாற்றம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திங்கள் கிழமை சாட்சியாபுரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியார் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்திற்கு அச்சங்க விருதுநகர் மாவட்ட செயலாளர் வில்லி ஆழ்வார் தலைமை வகித்தார். 
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வருவாய்க்கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் 15 பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments