முகப்பு
விருதுநகர்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம்

கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் சார்பில், கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 6:42 am IST
பகிர்:

கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் சார்பில், கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
     கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இசைக் குழுவினர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலமானது, கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவன் ரோடு,பேருந்து நிலையப் பகுதி, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளின் வழியே சென்றது. ஊர்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments