பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இருசக்கர வாகன பிரசாரம்
விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட
விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.யூ.டி.) சார்பில் திங்கள்கிழமை சிவகாசி ஒன்றியப் பகுதிகளில் இரு சக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.
சிவகாசி-சாத்தூர் சாலையில் மீனம்பட்டியில் தொடங்கிய இப் பிரசாரம், பேராபட்டி, அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், பாரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வழியே சிவகாசி-விருதுநகர் புறவழிச்சாலையில் நிறைவடைந்தது.
பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கைகளை வலியுறுத்திய துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
இதில்,சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிவகாசி நகரச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.