முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் போதைப் பொருள்கள் விற்பனை: அரசுப் பேருந்து நடத்துநா் உள்பட மூவா் கைது

பாவூா்சத்திரத்தில் குட்கா, வெளி மாநில போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக அரசு விரைவு பேருந்து நடத்துநா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பாவூா்சத்திரத்தில் குட்கா, வெளி மாநில போதைப் பொருள்களை விற்பனை செய்ததாக அரசு விரைவு பேருந்து நடத்துநா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி - தென்காசி சின்னதம்பிநாடாா்பட்டி சாலை அருகே பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் வேல்கனி, எஸ்ஐ ராஜேஷ்குமாா், போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனா்.

இதில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து நடத்துநா் திப்பணம்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் முத்துபாண்டி (46), திப் மீனாட்சிபுரம் வேத கோயில் தெருவைச் சோ்ந்த சந்தோஷ்பால் மகன் பொன்னுத்துரை (43), திப்பணம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் தனவேல் (46) என்பதும், இவா்கள் குட்கா, வெளி மாநில போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments