மகளிர் சுய உதவி குழுக்கள் உரிய காலத்தில் கடனை செலுத்தினால் வட்டி மானியம் பெறலாம்: கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர்
கூட்டுறவு வங்கியில் கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுவினர், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தினால்
கூட்டுறவு வங்கியில் கடன் பெறும் மகளிர் சுய உதவிக் குழுவினர், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தினால் வட்டி மானியம் பெறலாம் என கூட்டுறவு வங்கிகளின் இணை பதிவாளர், நிர்வாக இயக்குநர் ப. செந்தில் குமார் தெரிவி த்தார்.
விருதுநகர் மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர், நிர்வாக இயக்குநர் ப. செந்தில் குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது அவர் பேசினார். அதில் தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவினர் வங்கிகளில் கடன் பெறுவது குறித்தும், புதிய கணக்கு தொடங்குதல், கடனை திருப்பி செலுத்துதல் குறித்து விளக்கினார். மேலும், வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் அரசிடமிருந்து வட்டி மானியமாக 5 சதவீதம் வரை பெண்கள் பெறலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் செண்பகராஜ், பொது மேலாளர் சுந்தரேஸ்வரன், சுய உதவி குழுவினரின் ஊக்குநர்கள், பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.