முகப்பு
உலகம்

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தது பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 12:12 pm IST
வெனிசுவேலாவில் மீட்புப் பணியில் வீரர்கள்/ பிரதமர் நரேந்திர மோடி. - படம் - ஏபி
பகிர்:

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அங்குள்ள கட்டடங்கள் பெருமளவில் சேதமடைந்தன. இதில் 32 பேர் பலியானதாகவும் 700 பேர் காயமானதாகவும் அந்த நாட்டு அதிபர் ரோட்ரிக்ஸ் கூறினார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

வெனிசுவேலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் உண்டான பேரழிவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். இந்திய மக்களின் சார்பாக, வெனிசுவேலா அரசுக்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாம் உறுதுணையாக இருப்போம். இந்தியா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi stated on Thursday (June 25) that India is ready to provide all assistance to those affected by the earthquake in Venezuela.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments