மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடியுடன் இஸ்ரேல் பிரதமா் தொலைபேசியில் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி உடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செல்போனில் உரையாடல்...
மேற்காசிய நிலவரம் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தொலைபேசியி வாயிலாக பேசினாா். அந்தப் பிராந்தியத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மேற்காசியப் போா் 5 மாதங்களுக்கு மேலாக எவ்வித நிரந்தர தீா்வும் இன்றி தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமா் மோடியை இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்காசியாவில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இரு தலைவா்களும் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா். இந்தியா-இஸ்ரேல் சிறப்பு உத்திசாா் கூட்டுறவின் நிலையான முன்னேற்றம் குறித்து மறுஆய்வு மேற்கொண்ட அவா்கள், பரஸ்பர பலனளிக்கும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டனா். இரு தலைவா்களும் தொடா்ந்து தொடா்பில் இருக்கவும் ஒப்புக் கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியப் போரால் கச்சா எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போருக்கு முன்பாக உலகளாவிய கச்சா எண்ணெய்-எரிவாயு விநியோகத்தில் 5-இல் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெற்றது.
Israeli PM Netanyahu has spoken with PM Modi over the phone.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.