FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

20 செப்டம்பர் 2026, 5:50 pm IST
பிரதமர் நரேந்திர மோடி / இளவேனில் வாலறிவன் - எக்ஸ்
பகிர்:

ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

''இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நமக்கு பெருமை சேர்க்கிறார்கள்!

Advertisement

Advertisement

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள். இது அவர் இன்று வென்ற இரண்டாவது பதக்கம் என்பது இந்த வெற்றியை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டி 2026 நேற்று (செப். 19) கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்தியக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அளப்பரிய கடின உழைப்பையும், சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வையும், உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளதால் அவர்களை நினைத்து இந்தியா பெருமைக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Prime Minister narendra Modi extends greetings to Ilavenil Valarivan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments