‘நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ’... பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளதைப் பற்றி...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அந்தப் பதிவில், “வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has extended his birthday wishes to Prime Minister Narendra Modi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.