பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்... பிரதமர் மோடிக்கு கமல் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:
''பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றும் ஒரு சான்றாகும். பொதுவாழ்வில் எனது 70 ஆண்டுகாலப் பயணமும் மக்களின் நம்பிக்கையாலும் அன்பாலுமே நிலைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு அவரைச் சந்தித்தபோது, முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு அவர் தாராளமாக நேரம் ஒதுக்கித் தந்தார்.
எங்கள் அரசியல் சார்புகள் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் மீதான எங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் குறித்தும், வலிமையான தேசத்தையும் வருங்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்தையும் கட்டமைப்பதில் எங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பு குறித்தும் நாங்கள் உரையாடினோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.