FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன்; பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - படம் - எக்ஸ்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை சனிக்கிழமை (நவ. 7) தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாள், நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்த விடியோவில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒளியால் ஜொலிக்கிறது. இந்த தீபாவளித் திருநாள், இருளுக்கு எதிரான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

இந்த தீபாவளிப் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும். உங்களைப் போலவே, நானும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.

வழக்கம்போல, இந்த தீபாவளியையும் நமது ராணுவ வீரர்களுடன் நான் கொண்டாடவிருக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

summary

Prime Minister Narendra Modi extended his Diwali greetings to the people on Saturday (Nov. 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.