FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடி

உலகிற்கு தீர்வு அளிக்கக்கூடிய வல்லமை இந்திய இளைஞர்களிடம் உள்ளது என பிரதமர் மோடி பேசியது குறித்து...

11 அக்டோபர் 2026, 5:06 pm IST
பிரதமர் நரேந்திர மோடி - படம் - Narendra modi
பகிர்:

நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் அதிகமான கல்லூரிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) மாணவர்கள் முன்பு பேசினார்.

நாட்டின் எதிர்கால நாயகர்கள் மாணவர்கள்தான் என்றும் மாணவர்களின் திறன் மற்றும் செயல்பாடுகள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

சென்னை நந்தம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளியின் 50 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். விழாவில் ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள செய்யறிவு (ஏஐ) ஆய்வகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் சகோதர, சகோதரிகளே, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

''நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க வேண்டும்.

இது மாணவர்களுக்கான நேரம், நமது கனவு நிச்சயம் நிறைவேறும். உலகம் தீர்வைத் தேடிக்கொண்டு இருக்கிறது; உலகிற்கு தீர்வு அளிக்கக்கூடிய வல்லமை இந்திய இளைஞர்களிடம் உள்ளது.

இன்றைய இளைஞர்கள் தற்சார்பு இந்தியாவுக்கு மேலும் வலு சேர்க்க விரும்புகிறார்கள். கல்வி உடன் தேசபக்தியை உருவாக்கும் பள்ளியாக இது விளங்குகிறது.

நவராத்திரி நன்னாளில் நான் தமிழ்நாட்டு மண்ணில் இருக்கிறேன் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறிய பங்களிப்பிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்று இந்த தருணத்தில் திருவள்ளுவரை நினைவுகூர்கிறேன். அவர் மாணவர்களுக்கு உகந்த அறிவுரைகளை விட்டுச்சென்றிருக்கிறார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு ரஷிய மொழிபெயர்ப்பு திருக்குறளை பரிசாக வழங்கினேன். வாழ்க்கை முழுவதுமே கற்க விரும்புவோருக்கு திருக்குறள் சிறந்த வழிகாட்டி.

மாணவர்களின் பளிச்சிடும் கண்களில் நாட்டின் எதிர்காலம் தெரிகிறது.

மகாகவி பாரதியார் வாழ்க்கையில் காசிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது.

அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் உத்வேகம் அளிக்கிறது.

கன்னியாகுமரி - காஷ்மீர் வரையிலான யாத்திரையில் பல நினைவுகள் உள்ளன. இந்தப் பயணங்கள் பாரதத்தின் பன்முகத்தன்மையை புரிந்துகொள்ளும் வாய்ப்பை அளித்தது. இதனால் தமிழ் மீதான அன்பு மேலும் மேலும் பெருகியது.

இந்தியாவை அதிகம் சுற்றிப்பாருங்கள். இந்தியாவின் எந்த பாகத்துக்குச் சென்றாலும் தமிழ் பாரம்பரியம், கலாசாரம், மரபு, இலக்கியம் ஆகியவற்றை சுமந்து செல்லுங்கள். அங்கு இருக்கும் வேறுபட்ட பின்புலத்தை சேர்ந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

2014 ஆம் ஆண்டில் நாட்டில் 750 பல்கலை மட்டுமே இருந்தன. இன்று இந்த எண்ணிக்கை 1300க்கும் அதிகமாகியிருக்கிறது.

நாட்டில் கல்லூரிகளும் 38 ஆயிரத்தில் இருந்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் எதிர்கால நாயகர்கள் மாணவர்கள்தான். மாணவர்களின் திறன் மற்றும் செயல்பாடுகள் மீது நம்பிக்கை உள்ளது'' என பிரதமர் மோடி பேசினார்.

summary

Over 1,300 universities and more than 5,000 colleges in the country PM Narendra Modi speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments