பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர்: டொனால்ட் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியானவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியானவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (நவ. 17) தெரிவித்தார்.
11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிலிப்பின்ஸின் தலைநகரான மணிலாவில் ஆசியான் உச்சி மாநாடு மற்றும் க்வாட் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு நடைற்றது.
Advertisement
Advertisement
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் க்வாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஆகையால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
இவர்களுடனும் (ஆஸ்திரேலிய, ஜப்பான், இந்திய பிரதமர்கள்) இந்த நாடுகளுடனும் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. நான் இவர்கள் மூவருடனும் நீண்ட காலமாகப் பழகி வருகிறேன். இவர்கள் அற்புதமான மனிதர்கள், மேலும் இவர்கள் என் நண்பர்கள்.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர். சனே தகைச்சி மேலும் உறுதியானவராக இருக்கலாம். நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம்.
நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம். ஒருபோதும் இல்லாத அளவில் அரிய கனிமங்களை உற்பத்தி செய்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.