ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடி
ஐடிஐ மாணவர்களின் கடின உழைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக...

ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 22) தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் தொழில்பிரிவு பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கான 5 ஆம் ஆண்டு திறன் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
''தொழில்பிரிவில் பயிற்சி பெற்று ஐடிஐ பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நினைத்து பெருமைப்படும் வகையிலான மாற்றம் விரைவில் நடக்கும். ஐஐடி மாணவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் விரைவில் ஐடிஐ மாணவர்களுக்கும் கிடைக்கும்.
தொழில் பயிற்சி பெற்றவர்களின் திறன் மற்றும் கடின உழைப்பால் மட்டுமே தொழில் துறையில் ஆரோக்கியமான போட்டிகள் நடக்கின்றன.
இந்த மாணவர்களை கெளரவிப்பதிலும் அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பதிலும் நான் பெருமை அடைகிறேன். விரைவில் அனைவரும் பெருமைகொள்வார்கள்'' எனக் குறிப்பிட்டார்.