FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிரம்ப்புக்கு ராஜஸ்தான் தங்க பிச்வாய் ஓவியத்தை பரிசளித்த பிரதமர் மோடி!

டிரம்ப்புக்கு ராஜஸ்தான் தங்க பிச்வாய் ஓவியத்தை பிரதமர் மோடி பரிசளித்தது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - படம் - எக்ஸ்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் நாதத்வாராவிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க பிச்வாய் ஓவியம் ஒன்றை பரிசளித்தார்.

'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி, பிலிப்பின்ஸின் தலைநகரான மணிலாவில் நடைபெறும் உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிலிப்பின்ஸ் சென்றார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, மணிலாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடினர்.

தங்க பிச்வாய் ஓவியம்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, ராஜஸ்தானின் நாதத்வாராவிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்க பிச்வாய் ஓவியம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.

நாதத்வாராவில் தோன்றிய இந்தப் பாரம்பரியத் துணி ஓவியக் கலை, அதன் நுணுக்கமான, ஒளிரும் வண்ணங்கள் மற்றும் விரிவான வடிவமைப்புகளுக்காகப் புகழ்பெற்றது.

இதில், தாமரைகள், பசுக்கள், மரங்கள் போன்ற உருவங்கள் இடம்பெற்றன. அதே சமயம், அதன் தங்க நிறப் பூச்சு அதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.

summary

Indian Prime Minister Narendra Modi gifted US President Donald Trump a gold Pichhwai painting, brought from Nathdwara in Rajasthan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.