ரிங்கு சிங் - சமாஜவாதி எம்.பி. திருமணம்: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங்குவின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங்குவின் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங் மற்றும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜ் இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி லக்னௌவில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ரிங்கு சிங் குடும்பத்துடன் நேரில் சந்தித்து திருமணத்துக்கு அழைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரிங்கு சிங் கூறியிருப்பதாவது: குடும்பத்துடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து எனது திருமணத்துக்கு அழைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளது உண்மையில் எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றார்.
இந்திய அணிக்காக ரிங்கு சிங் இரண்டு ஒருநாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.