ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறித்து...
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் இருதரப்பு உறவுகள், போர் நிறுத்தம், ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசி வருகின்றனர்.
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவை சந்தித்து இரு தரப்பு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கிர்கிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்குச் சென்ற அவர்க்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிஷ்கெக் நகருக்கு வந்திருந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசப்பட்டது.
போர் நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், ரஷியா - இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் பேசினர். இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாவாசிகள் பரிமாற்றம் கடந்த ஆண்டு 16% அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Russian President Vladimir Putin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.