FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்முறை குரில் தீவுகளுக்குச் சென்ற புதின்! ஜப்பான் அரசு கண்டனம்!

ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுகளுக்கு ரஷிய அதிபர் புதின் சென்றதற்கு எதிர்ப்பு...

இத்துருப் தீவின் உள்ளூர்வாசிகளுடன் உரையாடும் ரஷிய அதிபர் புதின்... - ஏபி
பகிர்:

ஜப்பான் அரசு உரிமைகோரும் குரில் தீவுகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதற்கு ஜப்பான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள குரில் தீவுகளை ஜப்பான் அரசு உரிமைகோரி வருகின்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானிடம் இருந்து பல்வேறு தீவுகள் ஒன்றிணைந்த குரில் தீவுகளை அப்போதைய சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.

சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த குரில் தீவுகளை மீட்பதற்கு ஜப்பான் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த தீவுகளில் ரஷிய ராணுவத்தின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், குரில் தீவுகளின் தெற்கில் அமைந்துள்ள இத்துருப் தீவுக்கு ரஷிய அதிபர் புதின் இன்று (ஆக. 13) முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அந்தத் தீவில் அமைந்துள்ள மீன்வளத் தொழிற்சாலை, மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் ஆகியவற்றிருக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் இத்துருப் பயணத்துக்கு ஜப்பானிய அரசு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கூறிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி, “இத்துருப் உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்கள் வரலாற்று ரீதியாகவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் ஜப்பானின் பகுதிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக, ரஷியாவின் சைபீரியா முதல் கிழக்கு எல்லைகள் வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் புதின் தற்போது குரில் தீவுகளுக்குச் சென்றுள்ளார். மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு ரஷிய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இத்துருப் சென்றதற்கும் ஜப்பானிய அரசு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Japanese government has condemned Russian President Putin's official visit to the Kuril Islands, which Japan claims as its own.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments