FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறளைப் பரிசளித்த பிரதமர் மோடி!

ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பைப் பிரதமர் மோடி பரிசளித்தார்.

11 செப்டம்பர் 2026, 4:58 pm IST
ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பைப் பிரதமர் மோடி பரிசளித்தார். - ANI
பகிர்:

ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பைப் பிரதமர் மோடி பரிசளித்தார்.

தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாடு சனிக்கிழமை (செப்.12) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

Advertisement

Advertisement

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை காலை(செப்.11) தில்லி வந்தார். புதினுடன் உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.

பிப்ரவரி 2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷியாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது ரஷிய அதிபர் புதினுக்கு திருவள்ளுவர் எழுதிய தமிழ் நூலான திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பைப் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.

தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றான திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என்று அழைக்கப்படுகிறது. 1,330 குறள்களில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உலகளாவிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலின் ரஷிய மொழிபெயர்ப்பு புதினுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இது, இருநாடுகளின் தலைவர்களுக்கிடையேயான ஒரு முக்கிய கலாசார மற்றும் இலக்கியப் பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

summary

Prime Minister Modi presented a Russian translation of the Thirukkural to Russian President Putin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments