ரஷிய நாடாளுமன்ற தேர்தல்! மீண்டும் வெற்றியை நோக்கி புதின் கட்சி!
ரஷிய நாடாளுமன்ற கீழவைத் தேர்தலில் புதின் கட்சி முன்னிலை வகிப்பது பற்றி...
உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் ரஷிய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாதிமீர் புதின் தலைமையிலான ஐக்கிய ரஷிய கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயன்றதால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா 2022-ஆம் ஆண்டில் போா் தொடுத்தது.
அதன்பிறகு முதல்முறையாக ரஷிய நாடாளுமன்றத்தின் கீழவையில் உள்ள 450 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலின் வாக்குப்பதிவு செப். 18 முதல் 20 வரை நடைபெற்றது.
Advertisement
Advertisement
உக்ரைனின் கடும் தாக்குதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் 56.66 சதவிகிதம் மக்கள் வாக்களித்ததாக ரஷிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை முதல் வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 58 சதவிகித வாக்குகளை புதினின் ஐக்கிய ரஷிய கட்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷிய நாடாளுமன்றத்தின் கீழவையில் தனது கட்சியின் பெரும்பான்மையை புதின் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
இந்த தேர்தலின்போது, உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், கொ்சன், ஸபோரிஷியா பிராந்தியங்களிலும் ரஷியா தேர்தல் நடத்தியதற்கு உக்ரைனும், ஐரோப்பிய யூனியனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Russian Parliamentary Elections! Putin's Party Heading Towards Victory Again!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.