ராஜபாளையம் பள்ளியில் பேரிடர் மீட்பு பயிற்சி
ராஜபாளையம் அருகே முறம்பில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே முறம்பில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் குறித்த விளக்கத்திற்கு பின்னர், ஆபத்தில் சிக்கியவர்ளை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆபத்தில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்பது, முதலுதவி, மீட்கப் பட்டவர்களை பத்திரமாக தரையிறக்கி மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் பயிற்சி அளிக்கப் பட்டது.
மேலும் தீ பற்றுவதற்குரிய காரணங்கள் குறித்தும், தீ எரிவதற்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விளக்கம் அளித்த பின்னர், பல்வேறு வழிகளில் தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப் பட்டது.
இந்த பயிற்சி முகாமில் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.