தேசிய அளவிலான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2017-18 ஆம் ஆண்டுக்கான
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2017-18 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு ரூ.1.23 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை மற்றும் 5 மாணவர்களுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் திங்கள்கிழமை வழங்கினார்.
இதில், தேசிய அளவிலான வளைப்பந்து போட்டியில் வென்ற திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.வைரமுத்து, திருத்தங்கல் கே.எம்.கே. மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.கார்த்திக் ராஜா, எஸ்.ஹரிஹரசுதன், விருதுநகர் சத்திரியா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ்.மதுபாலா ஸ்ரீ, டி.சோபனா, சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி மாணவி எம்.வினிதா ஆகியோர்களுக்கும், கால்பந்து போட்டியில் வென்ற விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர் ஐ.சேரன், இறகுப் பந்து போட்டியில் வென்ற சிவகாசி ஒய்.ஆர்.டி.வி.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.வைசாலி, சதுரங்கத்தில் வென்ற சிவகாசி லயன்ஸ் மெட்ரிக். மேல் நிலைப் பள்ளி மாணவி கே.கே.ஜெயஸ்ரீ மற்றும் டேக்வாண்டாவில் வென்ற சிவகாசி எஸ்.என்.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜ.சோபியா சாரா என 11 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்திற்கான ஊக்கத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மேலும், தேசிய அளவில் வளைப்பந்தில் முதலிடம் பிடித்த திருத்தங்கல் கே.எம்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.கார்த்திக் ராஜா, ஸ்ரீ ஹரி பிரசாத், திருத்தங்கல் கலைமகள்
மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.வைரமுத்து ஆகியோர்களுக்கும், கராத்தேவில் முதலிடம் பிடித்த மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி பி.கற்பகம் என 4 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களையும், டேக்வொன்டோவில் 3 ஆம் இடம் பிடித்த தளவாய்புரம் காமராஜ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.செல்லப்பாண்டிக்கு ரூ.2,ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 5 பேருக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் 17 பேருக்கு ரூ.1.49 லட்சத்தில் ஊக்கத் தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.