ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கொத்தனார் கைது
ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் பிச்சைமாரி (43). இவர் கொத்தனார். சம்பள கணக்கு பார்க்க உதவிக்கு வர வேண்டுமெனக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிச்சைமாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.