மாடியில் இருந்து தவறி விழுந்துபெண் தொழிலாளி பலி
ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மனைவி ஜானகி (65). இவா் கட்டட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தென்காசி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டட வேலையின் போது ஜானகி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.