வேன் மீது அரசுப் பேருந்து மோதல்: சிமென்ட் வியாபாரி பலி
சாத்தூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேனில் பயணம் செய்த சிமென்ட் வியாபாரி உயிரிழந்தாா்.
சாத்தூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேனில் பயணம் செய்த சிமென்ட் வியாபாரி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், மேலஇலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (52). அந்தப் பகுதியில் சிமென்ட் விற்கும் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், இவா் சாத்தூா் அருகே உள்ள தனியாா் சிமென்ட் ஆலையிலிருந்து தனது வேனில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். நள்ளிசத்திரம் அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேனின் பின்புறமாக மோதியது. இதில் வேன் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் வேனில் இருந்த சிமென்ட் மூட்டைகளின் அடியில் சிக்கி அய்யாதுரை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாத்தூா் வட்ட போலீஸாா் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பசும்பொன்முடியரசன் (49) மீது வழக்கு ப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.