முகப்பு
விருதுநகர்

சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

சதுரகிரிக்கு 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி

Updated On : 3 ஜூலை 2024, 5:08 am IST
பகிர்:

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல புதன்கிழமை (ஜூலை 3) முதல் சனிக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாதம்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய நாள்களில் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக புதன்கிழமை முதல் வருகிற 6-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. 

Advertisement

Advertisement

இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால், மலையேற பக்தா்களுக்கு தடை விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments