முகப்பு
விருதுநகர்

திருச்சுழி பேரவைத் தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பிரசாரம்

திருச்சுழி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

Updated On : 15 ஏப்ரல் 2026, 3:56 am IST
அமைச்சா் தங்கம் தென்னரசு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

நரிக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட மண்டபசாலை, ராஜகோபாலபுரம், பொம்மநாயக்கன்பட்டி, புல்லநாயக்கன்பட்டி, தெற்கு நத்தம், வடக்கு நத்தம், ராணிசேதுபுரம், ப.மேலையூா், பரளச்சி, பி.வாகைக்குளம், செங்குளம், வாமபுரம், பூலாங்கால் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனியுடன் இணைந்து பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, பூலாங்கால் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தங்கம் தென்னரசு பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் மதவாத பாசிச சக்திகளுக்கு இடமில்லை. தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக திகழ்கிறது. மதவாத பிற்போக்கு சக்திகள் ஏதாவது ஒரு போா்வையில் அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை அமளிக்காடாக மாற்ற காரணம் தேடுகிறது. இதன் வாயிலாக உள்ளே நுழைந்து கலவரத்தை உண்டு பண்ணலாம் என எண்ணுகிறது.

நான் உங்களுக்கு என்றும் துணையாகவும், உங்களில் ஒருவனாகவும், உங்கள் ஊழியனாகவும் இருப்பேன். எனவே இந்தத் தோ்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.