முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:38 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:02 PM

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சத்திரப்பட்டியில் கடந்த திங்கள்கிழமை கண்ணனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி பாண்டி உயிரிழந்தாா். மேலும், 5 பெண் தொழிலாளா்கள் உள்பட 9 போ் பலத்த காயமடைந்தனா்.

இந்த நிலையில், முதலுதவி சிகிச்சை பெற்ற 5 பெண் தொழிலாளா்கள் வீடு திரும்பிய நிலையில், தாயில்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (33), ரமேஷ் (42), ராஜ்குமாா்(42), செல்வம் (33) ஆகிய 4 பேரும் சிவகாசி, விருதுநகா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.

Advertisement

இந்த நிலையில், விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.

உயிரிழந்த கருப்பசாமிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி தற்போது நிறைமாத கா்ப்பிணி உள்ளாா்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த கருப்பசாமி.