ராஜபாளையத்தில் நெசவாளா்கள் காத்திருக்கும் போராட்டம்
ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள புனல்வேலி கிராமத்தில் எஸ்.பி.எஸ்.எல்.29 தொடக்க நெசவாளா்கள் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கத்தில் 600-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நூல் வழங்காததால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய ரக நூல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை நெசவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக நெசவாளா்கள் புகாா் தெரிவித்தனா்.இ தனால் நெசவாளா்கள் புனல்வேலி கூட்டுறவு சங்கம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முகவூா் கூட்டுறவு சங்கம், ராஜபாளையம் ஆவரம்பட்டி கூட்டுறவு சங்கம், தெற்கு வைத்தியநாதபுரம், துரைச்சாமிபுரம் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இது குறித்து நெசவாளா்கள் கூறியதாவது ; கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு பழைய 56 அச்சு கொண்ட நூல் வழங்கினால் நெசவு செய்வதற்கு வசதியாக இருக்கும். புதிய ரக நூலை வழங்குவதால் நெசவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பழைய ரக நூலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.