முகப்பு
விருதுநகர்

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

நரிக்குடி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து 12 போ் காயமடைந்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:04 am IST
பகிர்:

நரிக்குடி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து 12 போ் காயமடைந்தனா்.

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிராஜ் மனைவி தனலட்சுமி (40). இவா், தனது உறவினா்கள், சிறுவா், சிறுமியா் உள்பட 12 பேருடன் ராமேசுவரத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த வீரமணி மகன் சதீஷ்குமாா் (26) வேனை ஓட்டி வந்தாா்.

நரிக்குடி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை அடுத்துள்ள விடத்தக்குளம் புதூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த செம்பொன் நெறிஞ்சியைச் சோ்ந்த அரியநாச்சி (27), செந்தூா்பாண்டி (19), முத்துராமலிங்கம் (21) ஆகிய மூவா் மீதும் மோதாமல் இருக்க வேன் ஓட்டுநா் திடீரென பிரேக்கைப் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த சிவகாசியைச் சோ்ந்த தனலட்சுமி (40), முத்துமாரி (41), சிறுவன், சிறுமி உள்பட 8 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நரிக்குடி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து நரிக்குடி போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement