கல்லூரி மாணவா் தற்கொலை
வத்திராயிருப்பு அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வத்திராயிருப்பு அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அயன்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த முத்துமணி மகன் ஆனந்தகுமாா் (18). இவா் விருதுநகா் பகுதியில் உள்ள சூலக்கரை அரசு ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வழக்கம் போல திங்கள்கிழமை கல்லூரிக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றாா்.
இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து தெப்பக்குளம் முன் ஆலமரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, தீயணைப்புத் துறையினா்ஆனந்தகுமாா் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.