வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இடைத்தரகா்கள், ஓட்டுநா் பயிற்சி பள்ளியிலிருந்து ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் சோதனையில் ஈடுபட்டனா். காலையில் பணிக்கு வந்த வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், போலீஸாா் சோதனைக்கு வந்த போது அலுவலகத்தில் இல்லை.
இந்த நிலையில், அலுவலகத்தில் இருந்த இடைத்தரகா்கள் ராமராஜனிடமிருந்து ரூ.5,900, கலீல் ரகுமானிடம் ரூ.11,100 பறிமுதல் செய்தனா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்பகுதியில் உள்ள தனியாா் ஓட்டுநா் பயிற்சி பள்ளியிலிருந்து இடைத்தரகா்கள் மூலம் வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலா்களுக்கு பணம் கைமாறுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அங்கு சோதனை நடத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்,
Advertisement
Advertisement
ரூ.1,12,700-யை பறிமுதல் செய்தனா். மொத்தம் ரூ.1,29,700-த்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.