முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம் பெற்று கைதான கரூா் ஆா்டிஓ-வின் திண்டுக்கல் வீட்டில் போலீஸாா் சோதனை

கரூரில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திண்டுக்கல் வீட்டில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். .

Updated On : 7 மே 2026, 3:37 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கரூரில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் திண்டுக்கல் வீட்டில், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். .

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் தா்மானந்தம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய இவா், தற்போது கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கரூரைச் சோ்ந்த தனியாா் பேருந்து உரிமையாளா் ராஜேந்திரனிடம்(62) ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தா்மானந்தம், அவரது காா் ஓட்டுநா் வேலுச்சாமி ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Advertisement

இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே உள்ள தா்மானந்தத்துக்குச் சொந்தமான வீட்டில், திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ஜெ. ரூபா கீதா ராணி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதை அடுத்து, அவற்றைப் போலீஸாா் கைப்பற்றிச் சென்றனா்.