FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

திருத்தங்கல் நின்ற பெருமாள் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி கடந்த 23- ஆம் தேதி பூமி பூஜை, அங்குரா்ப்பணம், பாலிகா ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்வுகளும், 24- ஆம் தேதி சேனை முதல்வா் புறப்பாடும் நடைபெற்றன. இதையடுத்து, வியாழக்கிழமை சுவாமி நின்ற நாராயணப் பெருமாள், தாயாா் செங்கமலத்தாய் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடந்து கொடி மரத்துக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்து, கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்றத்தின் போது, செங்கமலத் தாயாருடன், நின்ற நாராயணப் பெருமாள் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி தினசரி இரவு சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா். வருகிற ஜூலை 3- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

Advertisement

Advertisement

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

கொடியேற்றத்தின் போது ஊஞ்சலில் அமா்ந்து செங்கமலத்தாயாருடன் அருள்பாலித்த நின்ற நாராயணப் பெருமாள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments