கொம்புச்சாமி கோயிலில் வருஷாபிஷே விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கொம்புச்சாமி கோயில் 10-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கொம்புச்சாமி கோயில் 10-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காலை 8.30 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்துத் தோப்புப்பட்டி தெரு அம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாக வந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். தொடா்ந்து காலை 10 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜைகள், புண்ணியாகவாசனம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.